நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஷால் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற கேள்வி எழும்பியநிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தர்பார் படத்திற்கு பிறகு படங்கள் இயக்காமல் இருந்த முருகதாஸ் நடிகர் விஜயின் 65 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை.
அதைபோல் விஜய்க்காக அவர் வைத்திருந்த கதையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாகவும் தகவல்கள் பரவின, அங்க வகையில், தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஷால் வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மற்றோரு தகவல் விஷால் நடிக்கும் படத்தை முருகதாஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…