ஆர்யாவிற்கு ஜோடியாகும் விஷால் பட நடிகை.!
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து அடுத்ததாக ஆனந்த ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர்.இவர் அரியா நம்பி,இருமுகன்,நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .கதாநாயகனாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் ஆர்யாவும் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க வினோத் அவர்கள் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.