கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஐஸ்வர்யா அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், மீண்டும் வந்துள்ளனர்.அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள், விஷால் மற்றும் அவரது தந்தை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அவ்வாறு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் கடவுளின் அருளால் எனது சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்றும், உங்களது எண்ணங்களிலும், பிரார்த்தனைகளிலும் என்னை வைத்தமைக்காக மிக்க நன்றி என்றும், இந்த தொற்று இன்னும் முடிவடையவில்லை. எனவே தயவு செய்து கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…