விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தினை பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை மே மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சக்ரா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தினை பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, எங்கள் அதிரடி திரில்லர் படமான சக்ராவை பிப்ரவரி 19 ஆம் தேதி 4 தென்னிந்திய மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஒரு பெரிய வெளியீடாகப் போகிறது. என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…