மிலிட்டரி ஆபிஸராக விஷால்! இரு நாயகிகள்! சுந்தர்.சியின் ஆக்சன் பட பிரமாண்ட அப்டேட்ஸ்!
நடிகர் விஷால் இரும்பு திரை, அயோக்யா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரைடென்ட் ரவி என்பவர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்து வருகிறார். தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஒரு வழக்கை விசாரித்து அந்த வழக்கிற்க்காக, துருக்கி, தாய்லாந்து, பாங்காக் ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரிக்கும் வண்ணம் படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இப்படம், இந்தியாவில் சென்னை, ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டோராடூன், ஹைதிராபாத் ஆகிய இடங்களிலும் படமாக்கி வருகிறார்களாம். யோகி பாபு, ராம்கிம் சாயாசிங் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்களாம்.