செல்ஃபி எடுத்தால் போஸ் கொடுக்கும் கொரில்லாக்கள்: வெளியான வீடியோ!
செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மனிதர்கள் செல்பியினால் விபரீதமாக இறந்துபோகும் செய்தியையும் நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். இந்நிலையில் இந்த செல்பி மோகம் மனிதர்களைத் தாண்டி விலங்குகளையும் ஒட்டிக்கொண்டுள்ளது.
அம்மாதிரியான சம்பவம் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் நடந்துள்ளது. காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் கொரில்லா வகையான குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது . அந்த தேசிய பூங்காவில் பணியாற்றும் பேட்ரிக் சாடிக் என்பவர் கொரில்லாக்களுடன் நன்றாக பழகி அன்னோப்யமகா இருந்து வருகிறார்.
இந்நிலையில் தினமும் குரங்குகளுடன் செல்பி எடுத்து அவற்றையும் பழகியுள்ளார் பேட்ரிக். நாளடைவில் செல்போனை எடுத்தாலே இரண்டு குரங்குகள் வேகமாக வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அசத்துகின்றன. இந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.