கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சூரியும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு முத்தையா- கார்த்தி கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விருமன் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்பு இருந்தது.
கிராமத்து கதையில் உருவாகும் படங்களை இயக்கும் சிறந்த இயக்குனர் முத்தையா ஒரு போதும் குடும்ப ரசிகர்களை ஏமாற்றியதே இல்லை. அதைப்போல, விருமன் படத்திலும் மாற்றம் இல்லாமல் சிறப்பாக மீண்டும் கிராமத்து கதைக்களத்தை இயக்கியுள்ளார்.
கதைக்களம் :
விருமன் படத்தின் கதைப்படி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறக்கிறது. அதில் 4-வது குழந்தை ஹீரோ கார்த்தி. படத்தில் ஏதோ சில சூழ்நிலையால் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ்ராஜ் காரணமாகி விடுகிறார்.
எனவே இதனால் , கார்த்தி தனது தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதை வைத்து கதைக்களம் நகர்கிறது. பிறகு வில்லனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் என்னவெல்லாம் செய்து திட்டம் தீட்டினார். கார்த்திக்கும் ஆர்.கே.சுரேஷ்கும் எப்படி பிரச்சனை வந்தது.
அப்பாவும் (பிரகாஷ் ராஜ்) மகனும் (கார்த்தி) சேர்ந்தார்களா..? இல்லையா..? இறுதிக்காட்சியில் என்ன ஆனது ஆர் கே சுரேஷ் நிலைமை என்னானது என்பதை மீதி கதையின் சுவாரசியமாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.
விமர்சனம் :
படத்தில் கார்த்தியின் நடிப்பு வழக்கம் போல மிகவும் அருமையாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கதைக்கு ஏற்றது போல பிண்ணனி இசையும் அருமையாக கொடுத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பிளஸ் என்ற கூறலாம்.
கதாநாயகி அதிதி சங்கர் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் என்றே கூறலாம் முதல் படம் என்ற பதட்டமே இல்லாத அளவிற்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
மற்றபடி, படத்தின் கதைக்களம் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதைகளம் போல இருப்பதால் , அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை படம் பார்க்கும் போதே எளிதில் கணிக்க முடிகிறது. இது தான் மைனஸ் என்று கூட கூறலாம். மொத்தத்தில் விருமன் படம் ஒரு நல்ல குடும்ப திரைப்படம். எனவே கிராமத்து படங்களை விரும்பி பார்ப்பவர்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…