விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி !!
சென்னை : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியில் பெங்களூரு அணி ஈடுபட்டு வந்த நிலையில், விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி தற்போது அந்த பயிற்ச்சியை ரத்து செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின், எலிமினேட்டர் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது, இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் அணி தங்களது வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.
மேலும், விராட் கோலியின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆர்சிபி அணி தங்களது வலை பயிற்சியையும் ரத்து செய்துள்ளனர். குஜராத் கல்லூரி மைதானத்தில் ஆர்சிபி அணி தங்களது பயிற்சியை இன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. ஆனால், பெங்களூரு அணி பயிற்சிக்காக அங்கு செல்லவில்லை.
மேலும், இந்த பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பையும் பெங்களூரு அணி நடத்தவில்லை. இதனை தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளும் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தான் ஆர்சிபி அணி தங்கள்து பயிற்சியை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக குஜராத் காவல்துறை அதிகாரி விஜய்சிங்கா ஜூவாலா கூறுகையில், “விராட் கோலி இந்த கைது குறித்து அகமதாபாத் வரும்போதே கேள்விப்பட்டிருக்கலாம். அவர் இந்த நாட்டின் சொத்து. அவரது பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம் ஆர்சிபி அணி எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயாராகவில்லை. மேலும், அவர்கள் வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கும் இது குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது”, என்று அந்த காவல் துறை அதிகாரி கூறியிருக்கிறார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்சிபி தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.