விராட் ,ரோகித் விக்கெட்டை வீழ்த்த துடிக்கும் முகமது அமீர்! சச்சின் எச்சரிக்கை !
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை பாகிஸ்தான் அணியுடன் மோதிய 6 முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சில யோசனைகளை இந்திய அணிக்கு கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டியில் கூறுவது, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சிறந்து விளங்கும் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரின் விக்கெட்டை வீழ்த்துவது தான் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் நோக்கமாக உள்ளனர்.அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
குறிப்பாக பாகிஸ்தான் முன்னணி பந்து வீச்சாளர் முகமது அமீர் விரைவாக களத்தில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா இவர்களை வெளியேற்ற குறியாக உள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி எதிரான போட்டியில் 5 விக்கெட்டை பறித்து ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி பந்து வீச்சு ,பேட்டிங் ,பீல்டிங் ஆகிய மூன்று துறையிலும் ஆக்ரோஷமாக செயல்படவேண்டும் என கூறினார்.