வலிமை படத்திலிருந்து வெளியான வைரல் வீடியோ..!
வலிமை திரைப்படத்தின் தல அஜித் நடித்து ஒரு ஸ்டண்ட் காட்சியின் வீடியோ ஒன்று இணயதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு அப்டேட் கூட வெளியாகாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், தற்போது வலிமை திரைப்படத்தின் தல அஜித் நடித்து ஒரு ஸ்டண்ட் காட்சியின் வீடியோ ஒன்று இணயதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பைக் ரேசர் போல் உடையணித்துள்ள நடிகர் அஜித்திற்கு பக்கத்தில் கார் நிற்பதுபோல் தெரிகிறது இதோ அந்த வீடியோ
EXCLUSIVE Unseen CLIP Of #THALA From #Valimai SHOOTING SPOT
BLACK & BROWN ???? pic.twitter.com/kGcTJL77yE
— ELITE AJITHIANS™ (@EliteAJITHIANS) December 31, 2020