எல்லைக்குச் செல்லும்போது சீன வீரர்கள் அழும் வைரல் வீடியோ..!
இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்குச் செல்லும்போது சீன வீரர்கள் அழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தவீடியோவில், சீன இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் அவர்கள் சீன இராணுவப் பாடலை அழுது கொண்டு பாடுவதைக் காணலாம்.
அனைத்து இளம் வீரர்களும் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் லடாக்கின் எல்லையில் “திபெத்தில் பணியாற்ற முன்வந்தனர்”. தைவான் செய்தி அறிக்கையின்படி, ஹெபாய் மாகாணத்தில் ஒரு இராணுவ முகாமுக்கு வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, புயாங் ரயில் நிலையம் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் கூறுகையில், வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு விடைபெறும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. லடாக்கில் இந்தியாவைப் போலவே, சீனாவும், தைவானுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல நிலைகளில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பதற்றம் அங்கு குறைந்துள்ளது.
上车后被告知上前线
炮灰们哭的稀里哗啦!pic.twitter.com/wHLMqFeKIa— 自由的鐘聲???? (@waynescene) September 20, 2020