இட்ஸ் கொரோனா டைம்.!பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் புகைப்படம்.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வி.ஜெ. சித்ரா இது கொரோனா நேரமென்றும், மாஸ்க் அணியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சித்து விஜே தற்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.அதனுடன் இது கொரோனா நேரமென்றும் ,மாஸ்க் அணியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.தற்போது அந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த அழகான புகைப்படங்கள்