வைரல் செய்தி..! ஆட்கொல்லி கொரோனாவை பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய எழுத்தாளர்..!
உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனாவை பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர் தான் கடந்த 2013-ம் மறைந்த பிரபல எழுத்தாளர் சில்வியா பிரவுன் .
இவர் கடந்த 2008-ம் ஆண்டு எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312-வது பக்கம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கூறியுள்ளார்.
அதாவது 2020-ல் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுவதும் பரவும். நுரையீரல்களையும், சுவாச குழாய்களையும், பாதித்து அது பலருக்கு எமனாக அமையும்.இதை எந்த மருந்தாலும் கட்டுப்படுத்தவோ, ஒலிக்கவோ முடியாது.
அதேநேரத்தில் எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தசெய்தி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.