வன்முறையாக மாறிய போராட்டம் – இலங்கையில் ஊரடங்கு அமல்..!

Default Image

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிக அளவில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வீட்டிற்கு அருகில் நேற்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீசார் கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி மக்களை கலைத்துள்ளனர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியதால், வன்முறை அதிகரிக்காமல் இருப்பதற்காக, இலங்கைத் தலைநகரான கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்