அமெரிக்காவில் வன்முறை: அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய திட்டம்!

Default Image

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தடுப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

ரொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெட்ரா ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அதிகார மாற்றம் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தேர்தலில் முறையீடு நடத்துள்ளதாகவும், வெற்றியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளைமாளிகையில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல்துறைக்கும், ட்ரம்ப் ஆதரவலரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்ன துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அதிபர் ட்ரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். உடனடியாக அந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நீக்கப்பட்டு, ட்ரம்பின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்