மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் வன்முறை.! 38-க்கும் மேற்பட்டோர் பலி.!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை சுமார் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா சபை தூதர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது.ஆனால் அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
அதன் பின் கடந்த பிப்ரவரியில் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ,ராணுவ ஆட்சி மியான்மர் அரசை கைப்பற்றியது .அதன் பின் ராணுவம் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தனர்.எனவே மியான்மர் மக்கள் அனைவரும் மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட துவங்கினர் .
மியான்மரின் யாங்கூன்,மண்டாலா ,மோனிவா,நேபிடாவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்திய வன்முறையின் போது ராணுவ வீரர்கள் மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.ராணுவ ஆட்சி தொடங்கி நாளிலிருந்து வெடித்த இந்த வன்முறையில் சுமார் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தி வரும் இந்த வன்முறையில் இன்று மட்டுமே 38 பேர் இறந்துள்ளதாகவும், அதில் நான்கு பேர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.