இஸ்ரேல் ஹமாஸ் இடையே வன்முறை – 40 பேர் உயிரிழப்பு..!

Default Image

இன்று அதிகாலை இஸ்ரவேலுக்கு ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்ற வான்வழி தாக்குதலில் காஸாவில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக இஸ்ரேலியர்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை அல்அக்ஸா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், பாலஸ்தீனர்கள் கற்களைக் கொண்டு இஸ்ரேலியர்களை தாக்கினர். அதேசமயம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்த பதிலடி தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட ஹாமஸ் அமைப்பினர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த மோதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாலஸ்தீன போராளிகள் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த வான்வழித் தாக்குதலில் காசாவில் உள்ள பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.  இதனை அடுத்து காசாவை சேர்ந்த 35 பேரும், இஸ்ரேலை சேர்ந்த ஐந்து பேரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து மத்திய கிழக்கு அமைதிக்கான ஐ.நா தூதர் டோர் வென்னஸ்லேண்ட் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உடனடியாக இந்த மோதலை நிறுத்த வேண்டும் எனவும், காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான இந்த மோதல் பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், அமைதியை மீட்டெடுக்க ஐ.நா பல்வேறு வழிகளில் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன், இந்த மோதல் முழு வீச்சில் சென்று கொண்டிருப்பதால், உடனடியாக இந்த மோதலை நிறுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு காசாவில் நடந்த போருக்கு பின்பதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மிகப்பெரிய தாக்குதல் இது தான் என கூறப்படும் நிலையில், இந்த மோதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால் மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறும் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்