களிமண் பிள்ளையாரை வைத்து வழிபட்டால் ஏற்படும் பலன்களை பற்றி அறிவீர்களா..??
மூலப்பொருள் என்று வணங்கப்படும் முதன்மை கடவுள் விநாயகர் வேழ முகத்தவன் வினைகளை அகற்றி வெற்றி அருளும் அருள் வள்ளல், வணங்குவோரை வாரி அனைத்து அறிவையும் ஆற்றலையும் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் அளப்பரியவர்.
அவருடைய அவதார தினமாக கொண்டாடப்படும் சதுர்த்தி இந்தாண்டு வரும் திங்கள் அன்று கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் மிகவும் சிறப்பு மிக்கவர் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்றால் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும் ஆனால் விநாயகரை நினைத்த நிமிடத்தில் திரும்பிய இடமெல்லாம் இருப்பவர்.
வினைகளை தீர்க்கும் விக்னேஸ்வரன் ஞானப் பெருங்கடல் அவரை வழிப்பட்டு தொடும் எந்த ஒரு செயலும் வெற்றியில் தான் முடியும்.அத்துணை ராசிக்காரர் விநாயகர்.விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று.
தென் இந்தியாவில் விநாயகர் மிகவும் பிரபலம் மட்டுமல்லாமல் தங்களது இஷ்ட தெய்வமாக இருப்பவர் உதாரணமாக இங்கு உள்ளவர்கள் உ போடாமல் எந்தவோரு காரியத்தையும் செய்யமாட்டார்கள் அவரை வணங்கிய பின்னரே அனைத்தும் நடைபெறும்.
ஆணைமுகத்தனுக்கு அருகம்புல் இஷ்டம் அதை விட அவர் கொழுக்கட்டை பிரியர் மட்டுமல்லாமல் மனமுருகி வணங்கும் தன் பக்தனை பார்த்தாருளும் முதல்வன்
கிராம பகுதிகளில் எல்லாம் சின்ன சின்ன சிறுவர்கள் ஒன்றிணைந்து களிமண்ணில் விநாயகர் உருவத்தை செய்து சந்தனம் , குங்குமம் இட்டு அந்த கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று உங்கள் வீட்டிருக்கு விநாயகர் வந்துள்ளார் என்பார்கள் வீட்டில் உள்ளவர்கள் விநாயகரை வரவேற்று வணங்கி தங்களால் முடிந்த பொருட்களை கொடுத்து வழியனுப்பும் வழக்கம் உண்டு
இது மட்டுமல்லாமல் ஒவ்வொருவர் வீடுகளிலும் ஆணை முகத்தினை ஆனந்தம் பொங்க வரவேற்று வழிபடுபர்.அப்படி வீடுகளில் வணங்கும் பொழுது களிமண்ணால் செய்த விநாயகரை சுத்தம் செய்யப்பட்டு மாகோலமிட்ட மரப்பலகையில் வைத்து மலர்கள் ,இலைகள்,பிரசாதங்கள் ,என அனைத்தும் சமர்பித்து விநாயகர் கீர்த்தனைகளை பாடி வழிபாடு செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் அவற்றில் கல்வியில் மேன்மை , கவலை , கஷ்டங்கள் ,மற்றும் தடைகள் ,மனக்குழப்பங்கள் , அகன்று புதிய வழிபிறக்கும். மனமுருகி கணேஷனை வழிபடுவோம் அவர் கருணையை பெறுவோம்.