இன்று சதுர்த்தி வேழமுகத்தனை வேண்டி நிற்போம்!துன்பங்கள் நீங்க வழிபடுங்கள் கற்பக களிறை..!

Default Image

இன்று சதுர்த்தி அதுவும் வளர்பிறை சதுர்த்தி இந்த தினத்தில் அந்த வேழமுகத்தவனை மனதார வேண்டி நின்றால் மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும்.கற்பக மூர்த்தி மிகவும் எளிமையானவர் எந்த நிலையிலும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு கற்பக விருட்ஷமாக வேண்டியதை அள்ளி கொடுப்பதில் அவருக்கு நிகர் எவர் என்று எண்ணும் அளவிற்கு ஏற்றத்தை அளிப்பவர் அவரை இந்த தினத்தில் வேண்டி நின்றால் நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு செயலையும் தவிடு பொடியாக்கி விடுவார் கற்பக களிறு.அவரை இன்று வழிபடுவோம்.துன்பத்தை விரட்டுவோம்

வழிபடும்..விரதம் கடைபிடிக்கும் முறை... 

சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து வணங்கலாம் பூஜைக்கு அருகம்புல் மிகவும் சிறப்பு. இறைவனுக்கு  நைவேத்தியம் செய்து வழிபடுவது மேலும் சிறப்பானது. இன்று  அதாவது சதுர்த்தி தினம் காலை முதல் மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.  விரத்தினை மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.ஆனால் தற்போது வீட்டிலேயே இறைவனை பூஜை செய்யலாம். பூஜை முடிந்த பின்னர் உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் முழு உபவாசம் இருக்கமுடியாதவர்கள்  பால், பழங்கள் போன்றவற்றை உட்கொண்டு மேற்கொள்ளலாம்.

பலன்கள்:

இவ்விரதம் இருந்தால் எண்ணியது எண்ணி படியே நடக்கும். எல்லா காரியமும் தடை இன்றி நடக்கும்.இவ்விரதம் முக்கியமாக தீராதநோய் தீர்க்கும் வல்லமை கொண்டது.கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி,  நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என அனைத்து நன்மைகளையும் அடைய ஒருவருக்கு இவ்விரதம் அருளும் என்று புராணங்கள் கூறுகின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இவ்விரதத்தினை இருந்தால் ஒரு நல்ல விடிவுக்காலம் பிறக்கும்.நம்பிக்கை..இன்னும் அதிகளவு நம்பிக்கையோடு அவனை இருகப்பற்றுவோம்..இன்னும் எத்தனை சோதனை அளித்து சோதித்தாலும் பற்றி உன்னையே இருப்போம் ..எம் இறையே..வேறு கதி எது??இனி அறியாதத!!.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்