மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய பிரபலமான ஆர்.எஸ்.விமல் கடந்த 2018-ம் ஆண்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் விக்ரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.அதன் பின் விக்ரம் கோப்ரா , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்க சென்றதால் மஹாவீர் கர்ணா கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது அந்த திரைப்படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படத்தினை ஆர்.எஸ்.விமல் இயக்க குமார் விஷ்வாஸ் என்பவர் வசனம் , திரைக்கதை எழுத உள்ளதாக அறிவித்துள்ளது.அதற்கான வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது .மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதிலிருந்து இந்த பிரமாண்ட படத்திலிருந்து விக்ரம் விலகி உள்ளது உறுதியாகிறது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…