“விக்ரம் வேதா ” இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஹிரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30- ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இதையும் இயக்குனர் புஷ்கர்- காயத்ரி இயக்குகின்றார்கள். தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
இந்த இந்தி ரீ மேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி காணும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படதிற்கான படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025