விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் ஓ மை கடவுளே பட நடிகை.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து பிரபலமான வாணிபோஜனின் அடுத்த படம் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக என்று கூறப்படுகிறது.
வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வெள்ளித்திரையில் காலெடுத்து வைத்த இவர், சமீபத்தில் வெளியான ஒரு மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடிக்கின்றனர். மேலும் விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் பேரரான ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார் வாணிபோஜன்.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் டைரக்ட் செய்வதாக கூறப்படுகிறது. சினிமாயுலகில் என்ட்ரி கொடுத்த ஒரு படத்திலே பிரபலமாகி ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள வாணி போஜன், முன்னணி நடிகைகள் அனைவருக்கும் பெரும் போட்டியாகவே இருப்பார் என்று கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025