இதுவரை இந்திய திரையுலகில் வெளிவராத கதையில் விக்ரம் பிரபு..!
டாணாக்காரன் படத்தின் கதை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத கதை என்று இயக்குனர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் தமிழரசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” 1997 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் போலிஸ் வேலைக்கு செல்லும்போது அதில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத கதை ” என்றும் கூறியுள்ளார்.