உலக நாயகனையே இந்த விஷயத்தில் ஓரம்கட்டி விக்ரம் அதிரடி
நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் ஆனால் தற்போது நடிகர் விக்ரம் 12 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார். இவரை அடுத்து அதிக வேடங்களில் அந்த காலத்திலேயே நடித்து அசத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி.தன்னுடைய நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்து அட்டகாசம் செய்து இருப்பார்.அதன் பின்னர் நடிகர் கமலின் 10 வேடங்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் 12 கெட்டப்களில் நடித்து அசத்தியு உள்ளாராம். படமானது பிப்., 14 ம் தேதி காதலர் தினத்தின் ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது