100 வருட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் “விக்ரம்” தான் – திருப்பூர் சுப்பிரமணியம்.!
கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம்.
படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் போஸ்டர் வெளியீட்டு நன்றியை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றிவிழா கோவை கேஜி திரையரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில், அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் விக்ரம் தான் என கூறியுள்ளார். கமல் சார் அரசியலில் இருந்தாலும் சினிமா தான் அவர் பேச்சு மூச்சி..தமிழ் சினிமாவில் அவர் தான் பல விஷியங்களை அறிமுகப்படுத்தினார்” என்று பேசியுள்ளார்.