பாலிவுட்டிலும் மாஸ் காட்ட களமிறங்கும் விக்ரம்.!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தை ஹிந்தியில் டப் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். அது மட்டுமின்றி தனது மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – 60லும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது விக்ரமின் கோப்ரா படத்தினை ஹிந்தியில் டப் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹிந்தி டப்பிங் உரிமையை பிரபல நிறுவனமான கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் உண்மையெனில் மீண்டும் பாலிவுட்டில் கோப்ரா படத்தின் மூலம் விக்ரம் கலக்க போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே விக்ரம் அவர்கள் டேவிட் மற்றும் ராவணன் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து பாலிவுட்டில் மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025