கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், லாக்டவுன் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் அஸ்வின் என்பவரை இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதனையடுத்து சமீபத்தில் அஸ்வின் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாகவும், ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் திருமணத்தை செப்டம்பரில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் மியா ஜார்ஜின் குடும்ப தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…