இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றே கூறலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதைபோலவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 34 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து, விக்ரம் படம் தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் நாளில் 24கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் முதல் நாளில் அதிகம் வசூல் கொடுத்த படம் இது தான் என்ற சாதனையும் படைத்துள்ளது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…