விரைவில் ஒரு ஆக்சன் படத்திற்காக இணையவுள்ள சியான் விக்ரம் & துருவ் விக்ரம்!?
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர், ‘ விரைவில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து ஆக்சன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். ‘ என தெரிவித்தார்.
விக்ரம் அடுத்து வெளியாக உள்ள துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்58, பொன்னியின் செல்வன் படங்கள் முடிந்து, 2021இல் இப்படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.