பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது.
தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்து படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படப்பிடிப்பில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரம் மற்றும் மந்தாகினி, நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரின் காட்சிகள் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவருமே மணிரத்னம் இயக்கத்தில் 2010ல் உருவாகிய ராவணன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…