விக்ரம் – 60 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர்.!சிறப்பான தரமான சம்பவம் இருக்கும் போலயே .!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம்.
சமீபத்தில் விக்ரமின் 60வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க போவதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் சில தகவல்கள் கசிந்திருந்தது. தற்போது லலித் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அப்பாவும், மகனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் இந்த படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது . தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பாளரான லலித் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம்-60 போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் விக்ரம் – 60 புராஜெக்ட் தனக்கு மிகவும் ஸ்பெஷலான புராஜெக்ட் என்றும் கூறியுள்ளார். துருவ் சமீபத்தில் அர்ஜூன்ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.அப்பாவும் மகனும்முதல்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .தற்போது இந்த போஸ்ட்ரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
Immense happiness in bringing these names together !! #ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @anirudhofficial #Chiyaan60 will be one of the most special projects of my company @7screenstudio ???????? pic.twitter.com/PplF4loGQr
— Lalitkumar (@Lalit_SevenScr) June 8, 2020