விக்ரம் – 60ல் வில்லன் இந்த பிரபல நடிகராம்.! பெரிய ட்ரீட்டே இருக்கும் போலயே .!
விக்ரம் 60ல் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடமும், அரவிந்த் சாமி அவர்களிடமும் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் உண்மையெனில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.