விக்ரம் 100% என்னுடைய படம் – லோகேஷ் கனகராஜ் அதிரடி.!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் கூறியதாவது “விக்ரம் திரைப்படம் 100% என்னுடைய படமாக இருக்கும்.. இந்த படத்திற்கு ஆடியோ வெளியிட்டு விழா, டீசர், டிரைலர் என எல்லாம் இருக்கு” என கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் கண்டிப்பாக படம் மிகவும் அருமையாக எடுத்திருப்பார் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான கிளன்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக டிரைலர் வெளியாகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025