#VijayTheMaster: ஹிந்தியில் வெளியான தளபதி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

Published by
பாலா கலியமூர்த்தி

விஜயின் மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சான்றுதலை தணிக்கை குழு கொடுத்திருந்தது. இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்து திரையிடப்படவுள்ளது. அதன்படி அண்மையில் தெலுங்கில் மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது. இதனை B4U Motion Pictures நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜயின் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மாஸ்டர் படம் நேரடியாக ஹிந்தி டப் செய்து திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள VijayTheMaster லுக்கை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…

7 hours ago

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!

சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…

9 hours ago

‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!

சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…

9 hours ago

கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…

10 hours ago

கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…

11 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை :  GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…

11 hours ago