‘மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கசிந்தது தகவல்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘மாஸ்டர்’. இப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது அறிந்த ஒன்று தான் படத்தில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் முன்பே இதன் அனைத்து உரிமைகளையும் சேர்ந்து சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.படம் ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாகுவதற்கு முன்பே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி, பூ ராம் மற்றும் வேல ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பல முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தைத் தயாரித்துள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் போதே 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடையாததால், படத்தை வெளியிட முடியவில்லை. தற்போது டப்பிங் பணிகள் எல்லாம் விறுவிறுவென நடைபெற்று வரும் நிலையில் மாஸ்டருக்கு முன்னதாகவே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…