ஏன் வில்லன் வேடத்தில் நடிக்கிறீங்க..? அத பத்தி எல்லாம் கவலைபடல..! விஜய் சேதுபதியின் மாஸ் விளக்கம்
- நடிகர் விஜய்-நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படம்
- வில்லனாக நடிப்பது ஏன்..?என்று விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. நடிகர் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் இப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில் . படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர உள்ளது. படப்பிடிப்பு முழுவதையும் இம்மாத இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டு உள்ளனர்.
இதன்பிறகு படத்தொகுப்பு மற்றும் குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது. படத்தில் நடிகர் எவ்வளவு முக்கியமாக கேரக்டரோ அப்படி விஜய் சேதுபதியும் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் இருவருடைய நடிப்பில் உருவாகியுள்ள படத்தினை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு ‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே…?’என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அதுதான் விஜய்சேதுபதி அவர் கேள்வி குறித்து பதில் அளிக்கையில் இமேஜ் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் அதில் நடிக்கிறேன் கூறினார்.