நடிகர் விஜய் நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் விஜயின் ஏராளமானோர் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தி சென்றார்.அப்போது அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார் பின்னர் தனது செல்போனை எடுத்து ரசிகர்ளோடு வேன் மீது இருந்தவாறே செல்பி எடுத்து உற்சாகப்படுத்தி விட்டு சென்றார்.
இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இது தற்போது சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…