இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய் பற்றி சுவாரசியமான விஷியத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்றால் யுவன்சங்கர்ராஜா என்று கூறலாம். முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் இவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . தனுஷின் நானே வருவேன் கார்த்தியின் விருமன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் இசையமைத்து நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதனை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி யுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று இதற்காக விழா ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்த யுவன் தளபதி விஜய் குறித்தும் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்தார்.
அதில் பேசிய யுவன் ” விஜய் சாரின் மகன் சஞ்சய் யுவனிசம் என்ற டி-ஷர்ட் அணிந்திருந்த புகைப்படத்தை எனக்கு விஜய் சாரின் உதவியாளர் ஜெகதீஷ் அனுப்பினார். அதை பார்த்தவுடன் எப்படி என்ன சொல்ல எனக்கு தெரியவில்லை.. அருமை ப்ரோ என பதில் அனுப்பினேன். அடுத்ததாக விஜய் சாரை நேரில் சந்தித்த போது என்னிடம்விஜய் சார் ” எனது மகன் உங்களின் பயங்கரமான ரசிகன்.. நான் தான் உங்களுக்கு இந்த விஷயம் தெரியவேண்டும் என்பதற்காக அந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்ப சொன்னேன் ” என்று கூறியதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ள்ளார்.
முன்னதாக யுவனும் விஜய்யும் சந்தித்த புகைப்படத்தை யுவன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தற்கு 1லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்தது. விரைவில் இருவரும் இணைந்த படம் செய்யவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…