200நாட்கள் ஓடிய விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் வசூல் என்ன தெரியுமா..!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பல்வேறு இன்னல்களையும், தோல்விகளையும் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று தான் காதலுக்கு மரியாதை. 1997ல் ஃபசில் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான காதல் திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இதில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.
200 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடிய இந்த படம் ரூ. 2கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் ரூ. 15கோடி வரை வசூல் செய்து அப்போதே சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. இன்றும் இளசுகளின் பேவரட் படங்களில் காதலுக்கு மரியாதை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.