மட்டன் எல்லாம் இல்ல! கறார் காட்டிய மேனஜருக்கு கன்னத்தில் போட்ட விஜயகாந்த்!

Published by
பால முருகன்

சினிமாவில் சாப்பாடு போடு அதனை ரசித்து மக்களின் பசியை போக்கிய மனிதர் என்றால் நடிகர் விஜயகாந்த் என்று கூறலாம். அந்த அளவிற்கு இவருடைய படங்களை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகமானதை விட இவருடைய குணத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமானது ஏராளம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கேட்காமல் உதவி செய்வது பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது என பல உதவிகளை செய்து இருக்கிறார்.

இப்படி பட்ட நல்ல குணம் கொண்ட விஜயகாந்த் அதிகமாக கோபபடும் விஷயமும் சாப்பாட்டுக்காக தானாம். குறிப்பாக சாப்பிட வருபவர்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் விஜயகாந்திற்கு கெட்ட கோபம் வந்துவிடுமாம். அப்படி ஒரு முறை மட்டன் இல்லை என்று மேனஜர் ஒருவர் சாப்பிட வந்தவர்களிடம் சற்று கறார் காட்டி பேசினாராம்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த் வேகமாக சென்று அந்த மேனஜர் கன்னத்தில் அறைந்துவிட்டாராம். இந்த தகவலை அவருடன் இருந்த நடிகரும் சினிமா விமர்சகருமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பின் போது இடைவேளை நேரம் வந்ததும் பிரேக் எடுக்கமாட்டார்.

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்? லிஸ்ட்டை வெளியிட்ட மூத்த நடிகை!

கீழே சென்று சாப்பாடு எப்படி போகிறது நல்ல சாப்பிடுகிறீர்களா இல்லையா? சாப்பாட்டில் யாருக்காவது குறை இருக்கிறதா? எல்லாருக்கும் சரியாக சிக்கன் மட்டன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு பார்ப்பார். அப்படி பார்த்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்த பிறகு தான் விஜயகாந்த் கடைசியில் தான் சாப்பிடுவார்.

அப்படி ஒரு முறை சாப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு 13 பேருக்கு சரியான சாப்பாடு இல்லை சரியான சிக்கன் மட்டன் எதுவும் இல்லை. அப்போது மட்டன்  இருக்கிறதா? என்று அந்த 13 பேரில் சிலர் கேட்க அதற்கு மேனஜர் மட்டன் எல்லாம் இல்லை  என்று சற்று கறார் காட்டி பேசிவிட்டார். இதனை அங்கு இருந்து விஜயகாந்த் பார்த்துவிட்டார்.

பார்த்துவிட்டு வேகமாக அங்கு இருந்து வந்தார். கேப்டன் எப்போதுமே கோபபட்டுவிட்டால் பேசலாம் மாட்டார் அடித்துவிடுவார். அதைப்போல அந்த கறார் காட்டிய மேனஜருக்கு விஜயகாந்த் கன்னத்தில் ஒரு அடியை போட்டுவிட்டார். போட்டுவிட்டு என்ன நீ இப்படி பேசுகிறாய்? அவர்கள் சாப்பிட வந்து இருக்கிறார்கள் சரியாக சாப்பாடு போடவேண்டாமா? எல்லாருக்கும் நான் வாங்கிவிட்டு வர சொன்னேன்.

பிறகு எதற்காக அவர்களுக்கு மட்டும் சிக்கன் மட்டன் எதுவும் இல்லாமல் வெறும் குழம்பை மட்டும் கொடுத்தால் எப்படி நன்றாக இருக்கும் என்று கேட்டுவிட்டு கையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து உடனடியாக போய் அவர்களுக்கு மட்டனை வாங்கி கொண்டு வர சொன்னார். அது தான் கேப்டன்” என புகழ்ந்து பேசியுள்ளார் மீசை ராஜேந்திரன். இப்படி மக்களின் பசியை போக்கிய விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

22 minutes ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

1 hour ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

1 hour ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago