அதிமுக கூட்டணி விழா மேடையில் விஜயகாந்தின் படம்!! தகிடுதத்தம் போடும் அதிமுக கூட்டணி!
- அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ளது
- திமுக, கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பட்டியல்களை வெளியிட்டுள்ள நிலையில் தேமுதிக அதிமுக பக்கம் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விஜயகாந்தின் தேமுதிக யார் பக்கம் செல்லும் என்ற புதிர் தொண்டர்கள் அனைவருக்கும் தற்போது வரை முடியாததாகவே உள்ளது. அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை பலமுறை சந்தித்து உடன்பாடு ஏற்படவில்லை. முதலில் பாமகவை விட ஒரு தொகுதி அதிகம் வேண்டும் எனக் கேட்ட தேமுதிக பின்னர் 5 தொகுதி மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆதரவு என புதிய கண்டிஷனை போட்டது.
ஆனால் விடாப்பிடியாக இருந்த அதிமுக ஐந்து தொகுதிகளில் மட்டுமே கொடுப்போம் என்றது. பின்னர் இந்நிலையில் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார், மேலும் அவர் பேசும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக வைத்து பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தேமுதிகவுடன் கூட்டணி இன்னும் முடிவாகாததால் அந்த கட்சி கலந்துகொள்ளவில்லை என்பது திண்ணம் ஆகியுள்ளது. ஆனால், நேற்று தேமுதிகவின் படங்கள் அதிமுக பேனர்களில் இருந்தது. இன்று காலை சென்னையில் வைக்கப்பட்ட பேனர்களில் விஜயகாந்தின் படங்கள் இல்லை. மேலும் ஒரு சில இடங்களில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்ட அதிமுக பேனர்கள் தொண்டர்களால் கிழித்தெறியப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா மேடையில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று தெரிய தொண்டர்களும் மக்களும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், அதிமுக கூட்டணிக்காக என்ன தகிடுதத்த வேலைகளை செய்து வருகின்றது என்பது தெரியாமலும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.