பரிதாப செய்தியை காட்டிய இயக்குனர்? உடனடியாக உதவிய விஜயகாந்த்!

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் இருந்தே வயிறு நிறைய அனைவர்க்கும் சாப்பாடு போடுவது. கஷ்டப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வது என பலருக்கும் தெரியாமலே உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் உதவி செய்த யாருக்கும் தெரியாத சில தகவல்களையும் அவருடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறுவது உண்டு.

அந்த வகையில் ஒரு வருக்கு உதவி தேவை என்று செய்தியை பார்த்தே தெரிந்து கொண்ட விஜயகாந்த் உடனடியாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கள்ளழகர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் என்கூட அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

அந்த சமயம் நான் ஒரு பத்திரிகையின் செய்தியை படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பத்திரிகையில், அதில் ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் அவருக்கு ரொம்பவே பணம் தேவை படுவதாக போட்டிருந்தது. இதனை நான் படித்துக்கொண்டிருந்த போது விஜயகாந்த் அதனை பார்த்துவிட்டு என்னையா அது? என்று கேட்டார்.

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

அதற்க்கு நான் அதில் போட்டிருந்த விவரங்களை காமித்தேன். அவர் அந்த செய்தியை என்னிடம் இருந்து வாங்கி கொண்டு படித்தார். படித்து முடித்து அடுத்த நாள் அவர்களுக்கு தேவையான 4 லட்ச ரூபாயையும் மொத்தமாக விஜயகாந்த் கொடுத்து உதவி செய்தார்.  அந்த சமயம் அதாவது 1998-ஆம் ஆண்டு எல்லாம் லட்ச கணக்கு ரூபாய் என்பது பெரிய விஷயம். ஆனால், கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல் உதவி என்றவுடன் அவர்களுக்காக பணம் கொடுத்து விஜயகாந்த் உதவி செய்தார்” என  தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இந்த உதவி மட்டும் இல்லை இதைப்போலவே விஜயகாந்த் பல உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். இப்படி உதவி செய்த மனிதரின் தற்போதைய நிலை அனைவரையும் கண்கலங்க வைக்கும் விதமாக இருக்கிறது. ஏனென்றால், காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago