அவங்களுக்கு ஒன்னுனா பேசிட்டு இருக்கமாட்டேன்..!விஜயகாந்த் காட்டம்
தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டு மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசுகையில் மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் ஒன்லி ஆக்சன் தான் என்று ஆவேசமாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டாம், அதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது என்று கோரிக்கை விடுத்தார்.