இறுதிச்சுற்று இயக்குநரோடு-முதல்சுற்றை தொடங்கும் விஜய்-கசிந்தது #VIJAY65
நடிகர் விஜய் தனது 64வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் விஜயின்65 வது படத்தை பைரவா படத்தின் இயக்குநர் பரதன் மற்றும் பாண்டிராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜா ஆகிய இயக்குநர்களில் யாரோ ஒருவர் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.ஆனால் தற்போது விஜயின்65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
அதன்படி விஜயின்65 படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். நடிகர் விஜயிடம் இயக்குநர் சுதா கொங்கரா கூறிய அந்த ஒன் லைன் பிடித்துப் போகவே கதையை முழுவதும் கேட்க ஆவலாக இருப்பதாக விஜய் கூறியுள்ளாராம். எனவே சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.