மெகா ஹிட் படமான துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லையாம்.! அப்போ யார் தெரியுமா.?

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் அக்ஷய் குமார் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று துப்பாக்கி. தொடர் தோல்விக்கு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் துப்பாக்கி.
இந்த நிலையில் துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என்று கூறப்படுகிறது. ஆம் இயக்குநர் முருகதாஸ் முதலில் கதையை அக்ஷய் குமாரிடம் கூற அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தள்ளி போக, கதையை விஜய்யிடம் கூற அவரும் கதைக்கு ஓகே சொல்ல, தமிழில் விஜய்யை வைத்தும், அதனையடுத்து இந்தியில் அக்ஷய் குமாரை வைத்தும் முருகதாஸ் துப்பாக்கி படத்தை எடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025