பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொள்ள சில பிரபலங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது . அடுத்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள உள்ள சில பிரபலங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறி சில பிரபலங்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் உலாவி வருகிறது.அதன்படி பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தர்ஷா குப்தா, பவித்ரா, அஸ்வின், சிவாங்கி, பாலா, புகழ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போன்று சினிமாவில் கவர்ச்சி நடிகைகளாக வலம் வரும் ஸ்ரீரெட்டி, சோனா, ராய் லட்சுமி, பூனம் பாஜ்வா, கிரண் ரத்தோட் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த லிஸ்டில் ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…