பிக்பாஸ் பிரபலமான ரியோ தனது மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் அதற்காக விஜய் டிவி பிரபலங்களும் பிக்பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .
இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒருவருக்கொருவர் சந்தித்து நட்பை பாராட்டி வருகின்றனர்.இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் அனைவரும் இதுபோன்று ஒன்றாக இணைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.ஆம் பிக்பாஸ் பிரபலமும் ,நடிகருமான ரியோ தனது அன்பு மகளான ரிதியின் முதலாவது பிறந்தநாளாம் நேற்று .அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் .
அதற்காக விஜய் டிவி பிரபலங்களும், பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் . அஸ்வின்,,ஆரி, அர்ச்சனா,கேபி ,சோம், சம்யுக்தா, தொகுப்பாளினி பாவானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…