விஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் !
விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிகில் இசை வெளியிட்டு விழா சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிக பெரிய செட் அமைத்து நடைபெற்றது.
இந்த விழாவில் வழக்கம் போல் நம்முடைய தளபதி விஜய் பேசினார்.எப்போதும் போல அவர் பேசும் போது குட்டி கதை சொல்வது வழக்கம். இது போல் அவர் நேற்றும் குட்டி கதையை கூறி பேச்சை ஆரம்பித்தார்.
அப்போது அவர் “பூ கடையில் ஒருவன் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.கிட்ட தட்ட பொக்கே ஷாப்புன்னு வச்சிக்கோங்களேன். தீடீரென ஒரு நாள் அவனுடைய வேலை போய் விட்டது. அப்போது தெரிந்தவர் ஒருவர் அவனை பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார்.ஆனால் அந்த பட்டாசு கடை காரருக்கு முன்பு இவர் எங்கு வேலை செய்து கொண்டிருந்தார் என்பது தெரியாது.
அவன் அந்த கடையில் உட்காந்த பிறகு எந்த பட்டாசும் விற்கவில்லையாம். இதற்கான காரணம் என்ன என்பதை விசாரிக்கும் போது அவர் 10 நிமிடத்திற்கு ஒரு முறை பட்டாசில் தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்தாராம். பாவம் அவர் மீது எந்த தவறும் இல்லை.அது அவரோட தொழில் பக்தி.இதன் மூலம் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால் வேண்டியவர் ,வேண்டாதவர் என்று பார்க்காமல் நாம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யாரை எங்கு உட்காரவைக்க வேண்டுமோ அங்க உட்கார வைக்க வேண்டும்” என்று கூறி அவர் அந்த கதையை முடித்தார்.