நடிகர் விஜய்க்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக திகழ்பவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அன்மையில் நடந்த இணையதள ஊடகத்தின் விருது விழாவில் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியான கனா, அவர் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய2 படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சி எம்.ஜி.ஆர் முதல் பாலச்சந்தர் வரை பலரும் தயாரிப்பாளராக இருந்துள்ளனர். அதற்குக் காரணம் அவர்களின் கனவை நனவாக்குவதற்காகத் தான்.
ஆனால் சிவகார்த்திகேயன் தன் நண்பனின் கனவை நனவாக்க தயாரிப்பாளராக உருவாகியுள்ளார் பாராட்டுகிறேன். இளையதளபதி விஜய்க்கு பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று சிவாகார்த்தியேன் முன்னிலையிலேயே கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இதன்பின் பேசிய சிவகார்த்திகேயன் கனா படத்தைத் தயாரித்தது நான் அருண்ராஜா மேல் வைத்த நம்பிக்கை என்று சொன்னார்கள் அது உண்மையில்லை அது நடிகர் தனுஷ் என்மீது எதிர்நீச்சல் படத்தில் வைத்த நம்பிக்கை தான். நம்ம வீட்டுப் பிள்ளை கிளைமாக்ஸ்ல் என்னுடைய நடிப்பை பார்த்து கண் கலங்கியதாக பலர் கூறினார்கள். என்னை அப்படி ஊக்குவித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த 8 வருட சினிமா பயணமானது நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. கனா படத்துக்கு கிடைத்த விருது எனக்கானது மட்டும் அல்ல. என் நண்பன் அருண்ராஜா காமராஜாக்கும் ஆனது.அவருடைய அடுத்த படம் மிகப்பெரிய நடிகரை வைத்து இயக்குகிறார். இந்த மேடையில் அதை அறிவிக்க முடியாது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பானது வெளியாகும் என்று கூறினார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…