முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளத்து.
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.
இப்படம் குறித்து, அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்ததை அடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது.
மேலும், இனி எவ்வளவு அட்டகாசமான நடிப்பையும் படத்தையும் நீங்கள் கொடுத்தாலும் சரி. இனி உங்கள் படம் பார்க்க திரையரங்கம் செல்ல மாட்டோம் என இன்று டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…